இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக  இணையத்தளம் ஊடாக சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Previous articleஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி
Next articleஜேர்மனியில் கொரோனா தொற்று வீதத்தில் வீழ்ச்சி!