ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதத்தில் வீழ்ச்சி!

ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக பதிவாவதாகவும் இது கடந்த வாரத்தில் இது 20 க்கு மேல் இருந்தது என்றும் தரவுகள் காட்டுகின்றன.

இருப்பினும் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 137 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.