மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!

மட்டக்களப்பு காத்தான்குடி கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தியர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த பெண் நேற்று மாலை வழமைபோல தனது தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நீர் பம்பில் மின்சாரத்தைக் கையாண்ட போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.