பிஞ்சு குழந்தையின் விரலை துண்டாகிய செவிலியர்!

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின் விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டை விரல் அகற்றப்பட்டது.

தஞ்சாவூர் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மற்றும் பிரியதர்ஷினி ஜோடிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு வயிற்றில் குறைபாடு இருப்பதால், குழந்தையின் விரல் வழியாக வென்பிளான் மூலம், குழந்தைக்கு குளுகோஸ் செலுத்தப்பட்டது.

அப்போது, செவிலியர் ஷீலா என்பவர் குழந்தையின் கையில் உள்ள வென்பிளானை அகற்ற கத்திரிக்கேலால் நறுக்கிய போது, விரல் துண்டானது.

இது தொடர்பாக மருத்துவகல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. மேலும், மாநில மனித உரிமை ஆணையம், மருத்துவகல்லுாரி துறை இயக்குநருக்கு இரண்டு வாரத்திற்குள்ளாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், புகாரின் அடிப்படையில் , செவிலியர் ஷீலா மீது, மேற்கு போலீசார் 338 பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் விரல் துண்டான குழந்தைக்கு, விரலை ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள், வெட்டுப்பட்ட இடத்தில் தையல் போட்டனர்.

ஆனால், சிகிச்சையில் பலன் இல்லாமல், குழந்தையின் விரல் பகுதி அழுகி விட்டதாகவும், சிறிது காலம் கழித்து, செயற்கை முறையில் விரல் அமைத்து தருவதாகவும் கூறியுள்ளனர்.

Previous articleகொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் அழுகிய சடலமாக மீட்பு!
Next articleமரக் கிளைகளை வெட்ட சென்ற இளைஞன் மின் தாக்கி பரிதாபமாக பலி!