மரக் கிளைகளை வெட்ட சென்ற இளைஞன் மின் தாக்கி பரிதாபமாக பலி!

பெயர்: ஸியாவுல் அஹ்மட் ,வயசு : 18,இடம்: கிஉல உல்பெத்பிடிய, மாத்தளை.அடுத்த வருடம் A/L க்குள் நுழையும் மாணவன்!


புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அதி சக்திவாய்ந்த மின்கம்பிகள் தம் வீட்டருகே நிற்கின்ற மா மற்றும் பலா மரங்களின் கிளைகளுக்குள்ளே ஊடறுத்து செல்கிறது.

அவற்றால் எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்கள் நிகழலாம் எனும் அச்சத்தில் மரங்களின் கிளைகளை வெட்டி விட நாடி மரத்தில் ஏறி மரக்கிளைகளை தறித்துள்ளார்.இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என ஏற்கனவே யாரோ சொல்லியதை நம்பியே இந்த முயற்சியில் அவர் இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இறைவனின் நாட்டம், கிளைகள் மரக்கம்பியில் விழ, மின்சாரம் சட்டென உடலில் பாய்ந்து மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார் அந்த இளைஞர்.பின்னர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(இன்னாலில்லாஹ்…..)

மரணம் பொதுவானது, அதற்கு வயது, காலம், நேரம், கருப்பு, வெள்ளை எதுவும் கிடையாது.எழுதப்பட்ட நேரம் வந்ததும் நிகழ்ந்து விடும்.இளமையில் வறுமை கொடுமை என்பதை போல், இளம் வயதில் மரணங்களும் தாங்கி கொள்ள முடியாத கொடுமைதான்.


சகோதரர் ஸியாவுல் அஹ்மட்டின் பிரிவால் துயருறும் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நாமும் ஆழ்ந்த கவலை அடைகிறோம்.


இறைவனின் பால் சென்றவர்க்கு மேலான மறுமை வாழ்வு கிடைத்திடவும், இவரது பிரிவால் வாடும் குடும்பத்தாரின் இதயம் சாந்தி பெறவும் எல்லாம் வல்ல கருணையாளன் அருள் புரிவானாக!

Previous articleபிஞ்சு குழந்தையின் விரலை துண்டாகிய செவிலியர்!
Next articleஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை 8 மணி நேர போராட்டத்தின் பின் சாமர்த்தியமாக மீட்ட தமிழன்!