உதைப் பந்தாட்ட ரசிகர்களினால் நேசிக்கப்படும் கிறிஸ்டியானோவின் செயட்பாட்டால் 4 பில்லின் அமெரிக்க டொலர் இழந்த கோகோ கோலா

2020 யூரோ சாம்பியன்ஷில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஊடகவியலாளர் சந்திப்புக்கு பின்னர் கோகோ கோலா நிறுவனம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக திகழும் கிறிஸ்டியனோ ரொனால்டோ (வயது 36), நடைபெற்று வரும் 2020 யூரோ தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

செவ்வாயன்று குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் போர்ச்சுகல் அணியின் தலைவரான ரொனால்டோ கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்திப்பதற்காக மேடையில் அமர்ந்தார்.

அப்போது அவரின் எதிரில் மேசை மீது இரு கோகோ கோலா போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பார்த்து கோபமுற்ற ரொனால்டோ, கோலா போத்தல்களை அப்புறப்படுத்தி விட்டு அருகில் இருந்த தண்ணீர் போத்தலை மேலே உயர்த்திக் காட்டினார்.

‘அகுவா’ என தண்ணீருக்கான போர்த்துகீசிய வார்த்தையையும் அவர் கூறி கோலா மீதான தன்னுடைய வெறுப்பைக் காட்டி எல்லோரும் கோலாவுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டுமென சமிக்ஞை செய்தார் ரொனால்டோ.

ரொனால்டோவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் வைரலானது. கோடிக்கணக்கானவர்கள் ரொனால்டோவின் இந்த காணொளியை பகிர்ந்தனர்.

இதன் காரணமாக தற்போது கோகோ கோலா நிறுவனத்துக்கு 4 பில்லின் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரொனால்டோ சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடருக்கான அணுசரனையாளர்களுள் ஒன்றான கோகோ கோலா, கிறிஸ்டியனோ ரோனால்டோவின் செயலுக்காக இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.