முற்றாக முடக்கப்படுகிறது யாழ். சாவல்கட்டு கிராமம்!

அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையிட்டு யாழ்-சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு கிராமம் இன்று (2021.06.16) மாலை முடக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி அப்பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கிராமத்தினை முடக்குவதற்குச் சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்து யாழ். மாவட்ட கோவிட் தடுப்பு செயலணிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை குறித்த பகுதி முடக்கப்படவுள்ளது.