யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையில் தாய், தந்தை உட்பட மூவர் கைது!

யாழ்.வடமராட்சி வல்லைவெளி களப்பு பகுதியில் உள்ள பற்றைக்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை நேற்று மாலை முறியடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்த போதிலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் அங்கிருந்த்து தப்பி சென்றிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாரினால் சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 4 லீற்றர் 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. இதையடுத்து குறித்த நபரின் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் கசிப்பை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். அத்துடன், கசிப்பு உற்பத்தி செய்ய முற்பட்ட இடத்தில் 4 பரல்களில் 4 லீற்றர் 750 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டடுள்ளது.

இதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.