யாழில் கட்டட வேலையில் ஈடுபட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ். நீர்வேலியில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

“கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார்.

உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் அவர், ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.