கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous articleஇனவாதம் என்ற வைரசை வைத்துக்கொண்டு கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்?
Next articleநட்சத்திர ஓட்டலில் காதலருடன் ஓட்டலில் போதைப் பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது!