வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் மீட்பு!

வறுமை பிடியில் வாடிய குடும்பம் ஒன்றில் இருந்து பெற்றுக் கொண்ட ஆண் குழந்தையை 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் ஒருவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தற்போது வயது 16 என தெரிவிக்கப்படும் நிலையில் சிறுவனின் நண்பன் ஒருவனையும் குறித்த சந்தேகநபர் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் புத்தளம், மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் குடும்பத்தை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் சிறுவனின் தந்தை, நண்பர் ஒருவரின் உதவியுடன் சிறுவனை வளர்ப்பதற்காக தலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கு ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், மற்றுமொரு சிறுவனை தேடித் தருமாறு குறித்த நபர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய மற்றுமொரு சிறுவனையும் குறித்த நபருக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், குறித்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முதலில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் தான் முகங்கொடுக்கும் பாலியல் கொடுமைகளை பதிவு செய்து இரண்டாவது சிறுவனின் கைப்பேசிக்கு அனுப்பி வைத்துள்ளான்.

இதனை தொடர்ந்து தனது மகனுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் தொடர்பில் சிறுவனின் தந்தை நேற்று (15) தலங்கம பொலிஸில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்த நிலையில், சிறுவன் மற்றும் சந்தேகநபரான பாதுகாவலர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபரை கைது செய்து தலங்கம நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleநட்சத்திர ஓட்டலில் காதலருடன் ஓட்டலில் போதைப் பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது!
Next articleஇணைய வழி மதுபான விநியோகத்திற்கெதிராக எழுந்தது சர்ச்சை!