முகத்தை மூடுகின்ற கவசத்தை மாத்திரம் அணியலாமா?

கோவிட் தொற்றுக்கு எதிராக முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் பாதுகாப்பு வழங்காமையினால் முகக்கவசத்துக்கு பதிலாக முகம் முழுவதும் மூடுகின்ற கவசம் மாத்திரம் அணிவது பரிந்துரைக்கப்படவில்லை மற்றும் பொருத்தமானது அல்லவென சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஒருவர் இன்னொருவருடன் நேருக்கு நேர் உரையாடும் போதும் உமிழ்நீர்த்துளிகள் நேரடியாக முகத்தில் படுவதை தடுக்கவும் முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் அணிவது பொருத்தமானது என கூறப்படுகின்றது.

மேலும், தும்மல் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகின்றது. இருப்பினும் அவை மற்றவர்களின் சுவாசத்துளிகள் அல்லது தெறிப்புக்களில் இருந்து அவர்களை பாதுகாக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் முகக்கவசங்களுக்கு பதிலாக முகம் முழுவதையும் மூடும் கவசங்களை பயன்படுத்த முடியாது. முழு பாதுகாப்பையும் பெறுவதற்கு முகக்கவசத்துடன் முகம் முழுவதையும் மூடும் கவசங்களையும் அணிவது பொருத்தமானதாகும்.

முகக்கவசங்கள் மற்றும் முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் அணிவது மாத்திரம் மக்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்காது எனவும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் என்பனவும் மிக முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.