நீர்கொழும்புப் பகுதியில் வந்துபோன கடற்கன்னி இவர்தானாம்!

அண்மையில் நீர்கொழும்புப் பகுதியில் கடற்கன்னி ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பரபரப்பாக சமூகவலைத்தளங்களில் காணொளி பரவி இருந்தது.

இந்நிலையில் அந்த கடற்கன்னி போலியானது என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த கடற் கன்னியாக நடித்தவர் இதில் உள்ளவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீர்கொழும்புப் பகுதியில் கடற்கன்னி ஒன்று கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.