யாழில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

யாழில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுவேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது குறித்த நபர் தவறி கீழே வீழ்ந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ,அவரது சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது.