ஒன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் அனுமதி இல்லை!

பல்பொருள் அங்காளிடமிருந்து ஒன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதுடன் தேசிய கொவிட் தடுப்பு செயலணியும் அனுமதி வழங்கவேண்டும் செயலணியும் ஒப்புதல் வழங்கவேண்டும் என கலால் திணைக்களம் கூறியிருந்த நிலையில் இராணவ தளபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Previous articleயாழில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!
Next articleகொக்கிளாய் கிழக்கில் கரையொதுங்கிய புள்ளி சுறா!