கொக்கிளாய் கிழக்கில் கரையொதுங்கிய புள்ளி சுறா!

முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றுமாலை மீனவர்களின் வலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களுடைய வலையில் சிக்கிய குறித்த புள்ளி சுறா கரைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த புள்ளி சுறா மீனை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, சில தினங்களின் முன்னர் திருகோணமலை – குச்சவெளி கடற்கரையிலும், பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கி இருந்தது.