நாட்டில் நேற்றைய தினம் தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டோர் விபரம்!

நாட்டில் நேற்றைய தினம் (16) மாத்திரம் 22 ஆயிரத்து 501 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 26 ஆயிரத்து 810 பேருக்கு முதலாம் டோசும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில், இதுவரையில் 13 இலட்சத்து 90 ஆயிரத்து 126 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 932 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் 2 ஆயிரத்து 426 பேருக்கு நேற்று ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதோடு, இதுவரையில் 6 ஆயிரத்து 116 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.

அத்துடன் 64 ஆயிரத்து 986 பேருக்கு இதுவரையில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது