கொழும்பில் திடீரென இடிந்து வீழ்ந்த 200 ஆண்டு பழமையான கட்டடம்!

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்று நேற்றிரவு இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி சோய்சா என்ற குறித்த கட்டிடம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இடிந்து வீழ்வதற்கு முன்னர் சிறிது காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்டிடத்தை இடிக்க உரிமையாளர் முன்பு அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு இரவு கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், அதனால் உயிரிழப்புகளோ எதுவித காயங்களோ பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் உறுதிபடுத்தினர்.