மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று 200 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

பெரும்பாலான பகுதிகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படும் போது 250 கிராம் மரக்கறி 80 முதல் 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி, கரட், லீக்ஸ், பீட் மற்றும் கோவா போன்ற மரக்கறிகள் ஒரு கிலோ கிராம் 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைகளுக்காக இன்றும் (17), நாளையும் (18) திறக்கப்படுகின்றது.