எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இற்கு அழைக்கலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

லாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும், லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில், சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்பதால் அதனைப் பதுக்கி வைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே அது பற்றி முறைப்பாடு செய்ய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.