இணையவழிக் கற்றலுக்கான மாணவனுக்கு ஸ்மார்ட் போன் அன்பளிப்பு செய்த ஏறாவூர் ஆசிரியை!

இணையவழிக் கற்றலுக்கான அவசியம் கருதி மாணவனுக்கு ஸ்மார்ட் போனை ஏறாவூர் ஆசிரியை ஒருவர் அன்பளிப்பு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி பி ஈ ரீ கிருபைராஜா அப்பாடசாலையில் உயர்தரப் பிரிவில் 13 தரத்தில் கல்வி பயிலும் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவருக்கான தொலைத்தொடர்பு இணையவழிக் கற்றலுக்கான அவசியம் கருதி கையடக்கத் தொலைபேசி ஒன்றையும், தேவையான புத்தகங்களையும் இன்று அன்பளிப்புச் செய்துள்ளார்.

இந்த ஆசிரியரின் முன்மாதிரியான செயற்பாட்டுக்கு கல்விச் சமூகம் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

ஆசிரியை கிருபைராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றியும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகும்…