முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற மாணவன்

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.

இதனை கடந்த மாதம் முகநூலில் அறிவித்த போட்டியில் பங்கேற்று தெரிவித்தார்.

அந்த பிழையை கடந்த 15-ந் தேதி முகநூல் நிர்வாகம் சரிசெய்தது. அதனை கண்டுபிடித்த இந்திய மாணவர் மயூருக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தது. எதிர்காலத்திலும் இது போன்ற தகவல்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.