யாழ்.புங்குடுதீவிலிருந்து கிளிநொச்சிக்கு லொறியில் இறைச்சி கடத்திய கில்லாடிகள்!

​யாழ்.புங்குடுதீவிலிருந்து கிளிநொச்சிக்கு கடத்திச் செல்லப்பட்ட 16 கிலோ மாடு மற்றும் ஆட்டிறைச்சி கடற்படையினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி நோக்கி எடுத்துச் செல்லப்படுவதாக நெடுந்தீவில் இருந்து படகு மூலம் புங்குடுதீவுக்கு குறித்த இறைச்சிகள் எடுத்து வரப்பட்டுள்ளது. பின்னர் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டு புங்குடுதீவு ஊடக எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்துகுறித்த லொறி வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

சோதனையின்போது குறித்த வாகனத்தில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள்பெட்டிகளில் மறைக்கப்பட்ட மை கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.​

Previous articleமுகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற மாணவன்
Next articleஇலங்கையில் நேற்றும் 50 கடந்தை கொரொனா இறப்பு!