யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம்,  நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் நல்லூர் அரசடியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்பட்டனர்.

இதனால் கடந்த மே 28ஆம் திகதி அப்பகுதி முடக்கப்பட்டு, மக்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்படாதமையினால் இன்று காலை முதல் அரசடிப் பகுதி விடுவிகப்படுகின்றது.

இதேவேளை  சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்!
Next articleஇலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய்!