இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள தீர்மானம்!

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எழுந்தமானமாக பி.சி.ஆர் சோதனைகளை நடத்த மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளின் முன்னேற்றத்தை இதன் மூலம் கண்டறிவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளின் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண பல வாரங்கள் ஆகும் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த சனிக்கிழமையன்று சமூக மட்டத்தில் கோவிட்-19 பரவுவதைக் கண்காணிப்பதற்காக எழுந்தமானமாக பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரத்தில் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்ற கூற்றுகளுக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சு, நாட்டில் விரைவான அன்டிஜன் சோதனைகளை நடத்தும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விவரங்களின் படி, இந்த ஆண்டு மே 16 முதல் ஒரு மாதத்தில் நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகள் ஜூன் 15 அன்று பதிவாகியுள்ளன.

Previous articleபட வாய்ப்பு இன்றி விபச்சாரத்தில் சிக்கி கொண்ட நடிகைகள்!
Next articleஉலகின் முதல்தர விமான எஞ்சின் நிறுவனத்தில் இலங்கை பெண்!