இதுவரை கொரோனாவினால் மரணமடைந்த 660 உடல்கள் அடக்கம்!

கொரோனாவால் மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் புதன் மாலை வரை 660 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார். அத்துடன் 15 இந்து உடல்களும், 14 கிறிஸ்தவ உடல்களும்; 07 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 660 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.