யாழ்.மிருசுவில் பகுதியில் தண்டவாளத்திலிருந்த இரும்பு கிளிப்புகள் திருடிய 5 பேர் கைது!

யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் பாதையில் தண்டவாளங்களை பற்றியிருந்த இரும்பு கிளிப்புகளை திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்ற பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 14ம், 15ம் திகதிகளில் ரயில் பாதையில் தண்டவாளங்களை பற்றியிருந்த இரும்பு கிளிப்புகள் திருடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் திருடப்பட்ட இரும்பு கிளிப்புகளை வைத்திருந்த நபர் ஒருவரை யாழ்.ஐந்துசந்தி பகுதியில் கைது செய்திருந்தனர்.

அவர்ிடம் நடத்தப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையில் யாழ்.அரியாலையை சேர்ந்த 25 வயதிற்குட்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.