இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

4.8 மெக்னிடியூட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை அச்சுறுத்தி கப்பமாக பணம் பெறும் மோசடி நடவடிக்கை – எச்சரிக்கை மக்களே
Next articleதொற்றினால் உயிரிழப்பவர்களை எரியூட்ட கட்டணம் தேவையில்லை!