எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கரையொதுங்கிய 1,500 தொன் குப்பைகள்!

கொழும்பு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கரையொதுங்கிய 1,500 தொன் குப்பைகளை அகற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் கடந்த மாத இறுதிப் பகுதி முதல் உஸ்வட்டகெட்டியாவ, எலனகொட, சரக்குவ மற்றும் கெப்புன்கொடஆகிய கடற் பகுதியில் மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகளின் விளைவாகவே இந்த அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் அகற்றப்பட்ட 1,500 தொன் குப்பைகளை இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.

அதேநேரம் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற கடந்த மே 26 அன்று ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் முயற்சிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.