சுமார் 150 அடி பள்ளத்தில் புரண்ட பஸ்:சாரதி பலி

சுமார் 150 அடி பள்ளத்தில், பலாங்கொடை – ராசாகலை வீதியில் எல்லேவத்த பகுதியில் பஸ் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தினையடுத்து குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

தடுப்புக்காவலில் தொடரும் மர்மங்கள்: இரகசிய பொலிஸார் மீது குற்றச்சாட்டு?

தேயிலை தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை வீடுகளில் கொண்டுசேர்த்துவிட்டு திரும்பியபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது, சாரதி மாத்திரமே பஸ்ஸில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.