அனைத்து வைரஸ் திரிபுகளிலிருந்தும் தடுப்பூசி பாதுகாப்பு தரும்: பேராசிரியர் நீலிகா!

தற்போது பரவிவரும் வைரஸ் திரிபுகளான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ் வகைகளினால் டீற்படும் இறப்புகள் உட்பட கடுமையான COVID-19 தாக்கங்களை தடுப்பூசிகள் வழியாக குறைக்க முடியும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு ஊடக மாநாட்டில் பேசிய பேராசிரியர் நீலிகா மலாவிகே, COVID-19 தடுப்பூசியைப் பெறுவது மிக முக்கியமானது என்றார்.

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு தற்போது உலகில் வேகமாக பரவி வரும் வைரஸ்-மாறுபாடு. ஆரம்ப அறிக்கைககளின்படி, இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் வழக்கத்தை விட ஆபத்தான நோய்களுக்கு ஆளாக நேரிடும். என்றார்.

இந்தியாவில் இருந்து வெளிவந்த தகவல்களால் இலங்கையில் டெல்டா மாறுபாட்டைக் கண்டுபிடித்தது குறித்து பல நபர்கள் அச்சமடைந்துள்ளனர்.