ஜூன் 19 இல் அமெரிக்கா செல்கிறார் ரஜினி!

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர் அவ்வப்போது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருகிறார்.

இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு செல்ல முடியாத நிலையில் தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.

பாதுகாப்பு கருதி தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் திகதி (சனிக்கிழமை) அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினர் ஒரு சிலரும் பயணிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.