இந்தியாவில் கொரோனா நோயாளிக்கு பச்சை பூஞ்சை நோய்!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா நோயாளி ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக ஒரு சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோயும் பின்னர் மஞ்சள் பூஞ்சை நோயும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் வைத்தியசாலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அவரது நுரையீரல் பாதிப்பிற்கு நடந்த சோதனையின் போது இந்த நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

Previous articleசின்ன உப்போடையில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 09 வயது சிறுமி பலி!
Next articleபயணத்தடையை தளர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டமை ஏன்? முக்கிய தகவலை வெளியிட்ட ஜனாதிபதி