நேற்றைய தினமும் 55 உயிரிழப்புகள் பதிவாகின!

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறித்த அறிவிப்பினை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

குறித்த மரணம் 17ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2480 ஆக அதிகரித்துள்ளது.