வவுனியா பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

வவுனியா பம்பைமடு ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், 80 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் சிகிச்சை நிலையம் நேற்றையதினம் சுகாதார பிரிவினரிடம் பாவனைக்கு ஏற்ற வகையில் சிகிச்சை வழங்க கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.