தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளருக்கு திடீர் இடமாற்றம்!

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி வைத்தியர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் சமித கினிகே தொற்றுநோயியல் பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.