கொரோனா நிவாரணப் பணிக்காக லைகா புரடக்சன்ஸ் சார்பாக 2 கோடி நிதி உதவி!

கொரோனா நிவாரணப் பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா புரடக்சன்ஸ் சார்பாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் 2 கோடிக்கான (இந்திய ரூபாய்) காசோலை வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றில் இருந்து மீளும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிதி வழங்கப்பட்டது.