யாழில். 4 கோடி மதிப்பிலான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, கரம்பன் பகுதி கடலூடாக படகில் கஞ்சா போதை பொருளை கடத்தி வந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் பேசாலை மற்றும் அனலைதீவு பகுதியை சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான 130 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்ப்ட்டுள்ளர்.