நாட்டில் அவதானிக்கப்பட்ட புதிய வைரசுக்கும் தடுப்பூசியே சிறந்தது!

வைரஸ் திரிபுகளால் ஏற்படும் கடுமையான நோய் நிலைமைகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொரோனா தடுப்பூசிக்கு உண்டு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி நீலிகா மலவீகே தெரிவித் துள்ளார்.

இதனால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

.Alpha என்ற வைரசு திரிபு பிரிட்டனில் கண்டறியப்பட்டதாகும். Beta, Gamma பிரேசில் கண்டறியப்பட்ட வைரசு வகைகளாகும்.

இதே போன்று இந்தியாவில் கண்டறியப்பட்ட Delta என்ற வீரியமிக்க வைரசயும் ஒன்றாகும். Delta வைரசை பொறுத்தவரை இது தற்போது உலகில் வேகமாக பரவிவருகிறது.இதனால் பாதிக்கப்படுபவர்கள் மிக பாதிப்புக்கு உள்ளாவதாக ஆரம்ப ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தியாவில் திரிபடைந்த வைரஸின் பாதிப்பு நிலைமைகளை நாம் காண்கின்றோம். தற்போது இதன் பாதிப்பு குறித்து பலரும் அச்சமடைந்துள்ளனர் . நாட்டில் தெமட்டகொடை பிரதேசத்தில் குறித்த புதியவகை வைரஸ் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இவ்வாறான திரிபு பட்ட வைரசுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி நாட்டில் தற்போது பயன்பாட்டிலுள்ள வைரசு தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்வதே என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.