வெளிநாடு செல்வதற்கு போலியாக கொவிட் தொற்று இல்லை என (PCR negative) ஆவணங்கள் உட்பட போலி ஆவணங்களை சமர்ப்பித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மாங்குளத்தில் வசிக்கும் 25 வயது பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இன்று காலை கட்டார் ஊடாக பிரான்ஸுக்கு புறப்பட முயன்றபோது அவரது ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.