பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையிலும் சந்நிதி வேலனை தஞ்சம் என நம்பி வாழும் முதியவர்கள்!

உலகத்தை உலுக்கும் விடயங்களில் இதுவும் கடந்து போகும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சந்நிதியான் வாசலில் தஞ்சமடைந்த இவர்களையும் நாம் ஒரு முறை சிந்திப்போம். இவர்கள் அனைவரிடமும் ஏதோ ஒரு துன்பியல் கதை அவர்களின் வாழ்வியலுக்கு பின்னாள் இருப்பதை காணமுடிகிறது.

காலையிலிருந்து இரவு வரைக்கும் சந்நிதி ஆலய வாசலில் ஆங்காங்கு இருக்கும் மரநிழல்களில் இருந்து யாசகம் செய்யும் இவர்கள் அனைவரும் முருகனிடமே தஞ்சமடைந்துள்ளார்கள். அந்தவகையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இவர்களுக்கு உரிய நேரகாலத்திற்கு மூன்று வேளையும் சாப்பாடும் தேநீரும் கிடைக்கும்

. குளிப்பதற்கு தொண்டைமானாறு ஆறும் , கேணியும் , முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கிணறும் இவர்கள் நீராடும் இடங்கள் .முருகனின் ஆறு கால பூசையும் தவறாது காண்பார்கள்.அதுமட்டுமல்ல முருகனின் ஆலமிலை அமுதுக்கு காத்திருந்து உண்பார்கள். இந்த அமுதை சாப்பிட்டால் நோய்கள் வியாதிகள் நீங்கும் என்ற அவர்களது அசையாத நம்பிக்கை. அதுமட்டுமல்ல சிலர் கை கால் உளையும் போது முருகனின் நித்தியம் எரியூட்டும் பெரிய குத்து விளக்கு எரிந்த எண்ணெய்யை எடுத்து தங்களுக்கு உளைவு ஏற்படும் பகுதிகளில் தடவிக்கொள்வார்கள். இவை யாவும் இவர்கள் சந்நிதி முருகன் மீது வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை பறைசாற்றிக்காட்டுகின்றது.எங்கள் அப்பன் முருகன் இருக்கும் போது எமக்கு என்ன குறை எனச்சொல்லுவார்கள்.

ஆனால் இரவு படுத்துறங்கும் இடமே அவர்களுக்கு ஏற்றதாக அமையவில்லை. ஒரு புறம் நுளம்புத்தொல்லை மறுபுறம் மணலிலும் தரையிலும் படுத்துறங்கும் நிலை. சிலருக்கு சில மடங்கள் தஞ்சம். சில வேளைகளில் இரவு நேரங்களில் மலசலம் கழிப்பதற்கு செல்வதற்கு பெரும் சிரமபப்படுவார்கள். மலசல கூடத்துக்கு செல்வது என்றால் 250 m தூரத்துக்கு அப்பாலே தான் செல்லவேண்டும். இரவு நேரங்களில் பெரும் சிரமப்படுவார்கள். அதுமட்டுமன்றி சிலருக்கு நோய்களினால் அவதிப்படுவார்கள். குறிப்பாக இரத்த அழுத்தம்,சுவாச நோய்கள் போன்றவற்றினாலும் அவதியுறுவார்கள்.

யாருமற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே உதவி புரிபவர்களாக இருப்பதை காணக்கூடியாத இருக்கும். சில பேர் வேறு ஆலயங்களின் விசேட உறசவ தினங்களில் அடியார்கள் பெருமளவு கூடும் ஆலயங்கள் நோக்கி யாசக நலன் கருதி அந்த ஆலயங்களுக்கு செல்வார்கள். குறிப்பாக வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அமைந்துள்ள குருக்கட்டு பிள்ளையார் சந்நிதிதானத்தின் முன்னே அமர்ந்திருந்து யாசகம் வேண்டுவார்கள். இப்படியாக சந்நிதி வாசலில் தஞ்சமைந்த அடியார்கள் நிலை. இவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஊடாக மாதத்தில் நான்கு தடவைகள் மருத்துவர்கள் வருகை தருவார்கள்.

அவர்களிடம் தமது நோய் பற்றி காண்பித்து நோயுள்ளவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளுவார்கள். சில முதியவர்கள் பித்து பிடித்ததது போல சித்துப்போக்கில் திரிவதையும் நாம் சந்நிதியான் வாசலில் காணக்கூடியதாக இருக்கும். இவர்களை சிலர் முருகனின் அருளாளர்கள் என எண்ணி பய பக்தியுடன் வீழ்ந்து வணங்கி அருளாசி பெறுவதையும் காணக்கூடியாதாக இருக்கும் .சந்நிதியான் திருவிழா என்றால் எல்லா முதியவர்களுக்கும் ஆடைக்கு பஞ்சமிருக்காது.

நேர்த்தியாக எண்ணி அடியவர்கள் வாங்கிக்கொடுப்பார்கள். மற்றைய காலங்களில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஊடாக புத்தாடைகள்,,சவர்க்காரம் ,சலவைத்தூள்,பற்பசை போன்றவை மாதத்தில் மூன்று தடவை இவர்களுக்கு வழங்கி வைக்கப்படும். எல்லா விதமான சலுகைகள் இருந்தாலும் காற்றிலும் மழையிலும்.,பாதுகாப்பு இல்லாத மண்டபங்களில் கட்டாந்தரையிலே தான் இவர்களது வாழ்க்கை. ஒரு மனிதனுக்கு அதிலும் வயதுமுதிர்ந்த காலத்தில் நிம்மதியான சுகமான நித்திரையே அவர்களுக்கு தேவை. ஆனால் அவர்களுக்கு சுகமான நித்திரை அவரகளுக்கு கிடைப்பதில்லை. காரணம் மழை காலம் என்றால் குளிர்ந்த நிலத்தில் எப்படி படுத்துறங்குவது. சிந்தித்து பாருங்கள் பாருங்கள் உறவுகளே இவ்வாறான முதியவர்களை சிறப்பாக சகல வசதிகளுடன் அவர்கள் வாழ்வதற்கு ஏற்றதொரு சிறப்பான முதியோர் இல்லம் ஒன்றினை அவ்விடத்தில் யார் ஒருவர் தன்னிலும் அமைத்து இவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பார்கள் ஆனால் அதுதான் நாம் செய்கின்ற பெரும் புண்ணியம் தொடர்ந்தும் தொடர்ந்தும் அன்னதான மடங்களை அமைப்பதனால் எந்த பலனும் இல்லை .முதியவர்களுக்கான அடிப்படை வசதிகளோடு கூடிய ஒரு முதியோர் இல்லமே சிறப்பானது .

சன்னிதி ஆலய வாசலில் இருக்கின்ற முதியவர்களை முதியோர் இல்லத்தில் இணைப்பதற்கு கேட்டாலும் அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள் காரணம் முருகனோடு இருக்கவேண்டும் என்ற எண்ணம் மற்றும் சிந்தனையின் உந்துதல் அவர்களுடைய எண்ணத்தில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது எனவே தனவந்தர்கள் கல்வியாளர்கள் அடியவர்களாகிய நீங்கள் அனைவரும் உணர்ந்து சிந்தித்து இவர்களுக்காக உங்களலான உதவிகளாக ஒரு முதியோர் இல்லமாக பரிணமிக்க செய்வதுதான் சிறப்பான விடயமாக அமையும் எனவே உரியவர்கள் கவனத்தில் கொண்டு இவ்வாறான பெரும் அவதியுறும் முதியவர்களுக்கு ஒரு முதியோர் இல்லத்தை ஆலய பிரதேசங்களில் அமைப்பார்களனால் அதுவே சிறப்பு கூடியதாக அமைந்து விடும் இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல அங்கிருக்கின்ற முதியவர்களோடு நாம் பேசுகின்ற போது அவர்களினால் அவர்களது மனங் களிலிருந்த எண்ணங்களாக சொல்லப்பட்ட விடயமே இதுவாகும்.
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.