மருத்துவ சிசிக்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன்!

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மருத்துவ சிசிக்சைகளுக்காக இன்று காலை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க இதை தெரிவித்தார்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பஸ்ஸொன்றில், பலத்த பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது