பொலிஸ் நிலையம் வரை சென்ற டிக் டொக் காணொளி!

பயணத் தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கு உணவு பொருட்களை நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்து நபர் ஒருவர் தமது வீட்டிற்கு அருகில் காணொளி பதிவு செய்ததாக குறிப்பிட்டு உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிசிரிவி காட்சிகள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் கடந்த தினம் வௌியிட்டிருந்தார்.

இதன்போது, டிக்டொக் காணொளி ஒன்றை பதிவு செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளரான காணொளியில் உள்ள நபர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சிசிரிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய வீட்டின் உரிமையாளர் உப்புவேலி பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று (19) திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஎரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்!
Next articleஇரு மாமன் மகள்களை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!