இரு மாமன் மகள்களை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!

இரு மாமன் மகள்களை காதலித்து வந்த இளைஞர் ஒருவர் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அர்ஜுன், செல்போன்மூலம் அத்தை மகள்களான சுரேகா மற்றும் கனகா உஷாரானி ஆகிய இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து பொழுதை கழித்துள்ளார்.

உஷாராணி கான்பூர் கிராமத்திலும், சுரேகா ஷம்புகுடா கிராமத்திலும் வசித்து வந்த நிலையில் இருவரையும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இரு பெண்களின் வீட்டுக்கும் தெரியவர, இருவரில் எந்த மாமன் மகளை திருமணம் செய்யபோகிறாய் என்று உறவினர்கள் கேட்க, அர்ஜூனோ காதலித்த இரு காதலிகளிடமும் சாமர்த்தியமாக பேசி சம்மதிக்கவைத்து அவர்கள் விருப்பதின் பேரில் இருவரையுமே திருமணம் செய்வதாக கூறி எல்லோரையும் அதிரவைத்தார்.

அவர்கள் சாதி வழக்கப்படி இருதார மணம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற போதும், இரு பெண்களும் தாங்கள் அர்ஜுன் மாமாவை தான் திருமணம் செய்வோம் என ஒற்றை காலில் நின்றதால் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் நிலை உருவானது.

இதனையடுத்து கிராமத்து பெரியவர்களும் அழைத்து பேசியதால் திருமணத்திற்கு இரு பெண்வீட்டாரும் சம்மதித்த நிலையில், கான்பூர் கிராமத்தில் ஒரே மணபந்தலில் அதிவாசிகள் சம்பிரதாயம் படி இரண்டு மணப் பெண்களின் கழுத்தில் தாலி கட்டி பெரியவர்கள் முன்னிலையில் இருவரையும் வேலாடி அர்ஜுன் மனைவியாக்கிக் கொண்டாராம்.

Previous articleபொலிஸ் நிலையம் வரை சென்ற டிக் டொக் காணொளி!
Next articleபொலிஸார் தவறு செய்தால் இந்த எண்ணுக்கு அழைத்து முறையிடலாம்