பொலிஸார் தவறு செய்தால் இந்த எண்ணுக்கு அழைத்து முறையிடலாம்

பொலிசாரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்

மேலும் 50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஹிக்கடுவ பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

Previous articleஇரு மாமன் மகள்களை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!
Next articleநேற்றுடன் இலங்கையில் 2,500 ஐத் தாண்டிய கொரோனா மரணம்!