உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம்தான் – ஜே.வி.பி

முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாட்டில் மோசமான சூழ்நிலை இருந்தபோதிலும் பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்று போராடிவருவதாகவும் அவர் கூறினார்.

மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்தையும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். எவ்வாறு இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சிறப்பாக முன்னெடுக்க அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.