தென்னை மரம் வெட்ட தடை!

பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதற்காக அவசியம் இருப்பின் அது குறித்து பிரதேச செயலாளரின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.