பொது மக்களை முழந்தாளிட வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

மட்டக்களப்பு – ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏறாவூர் மிச் நகர் பகுதியில் பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை முழந்தளிட வைத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

எனினும் இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதென்னை மரம் வெட்ட தடை!
Next articleடோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!