வவுனியாவில் தபால் மூலம் வீடுகளுக்கே மருந்து பொருட்கள் விநியோகம்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் க.ராகுலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கோவிட் தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துப் பொருட்களை 074 010 4936 மற்றும் 076 100 1936 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தபால் மூலம் வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்