வவுனியா கூமாங்குளத்தில் 7 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா!

வவுனியா- கூமாங்குளத்தில் 7 பேர் உட்பட 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (18.06) வெளியாகின.

அதில், கூமாங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் இருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் நான்கு பேருக்கும்,

திருநாவற்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், பாலமைக்கல் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மரக்காரம்பளை பகுதியில் ஒருவருக்கும் என 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தொற்றாளர்களில் வவுனியாவில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 7 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.